என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டெல்லி கவர்னர் விவகாரம்
நீங்கள் தேடியது "டெல்லி கவர்னர் விவகாரம்"
கவர்னர் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சொல்லி இருக்கும் தகவல்களை வைத்து பத்திரிகைகளில் வெளியான செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் கவர்னர் கிரண்பேடி இணைத்து வெளியிட்டுள்ளார். இதனால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
புதுச்சேரி:
நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும், புதுவை-டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே சட்டசபை செயல்படுகிறது.
ஆனால், இவை யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னருக்குத்தான் அதிகாரம் என்று கூறி புதுவை கவர்னர் கிரண்பேடி, டெல்லி கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
இதை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
இந்த தீர்ப்பு 100-க்கு 110 சதவீதம் புதுவைக்கும் பொருந்தும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். மேலும் கவர்னர் கிரண்பேடி இனிமேலும் இதை மீறும் வகையில் செயல்பட்டால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொட ரப்படும் என்றும் கூறினார்.
இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி நேரடியாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நேற்று கூறப்பட்ட தீர்ப்பு புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி இருக்கிறது.
அதாவது டெல்லி மாநிலம் அரசியல் சாசன சட்டம் 239 ஏ.ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்கள் 239 ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது.
எனவே, இப்போதைய தீர்ப்பு 239 ஏ.ஏ. பிரிவின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. இதனால் புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தனர்.
எனவே, டெல்லி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா? என்ற கேள்வி எழுந்தது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இது சம்பந்தமாக சொல்லி இருக்கும் தகவல்களை வைத்து பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

அந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் கவர்னர் கிரண்பேடி இணைத்து வெளியிட்டுள்ளார். இதனால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
×

X